Categories
தேசிய செய்திகள்

மே மாதம்….. எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை….. இதோ முழு பட்டியல்…..!!!!!

மே மாதம் எந்தெந்த தினங்கள் வங்கிகளில் விடுமுறை நாட்களாக இருக்கும் என்பதைக் குறித்த பட்டியலைப் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மே மாதத்தில் பெரும்பாலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்களாகவே இருக்கும். மே மாதம் மொத்தம் 31 நாட்களை கொண்டுள்ளது. தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என ரிசர்வ் வங்கியின் கீழ் ஏகப்பட்ட வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி உள்ளது. மே மாதத்திற்கான விடுமுறை தொடர்பான தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தாலும், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படும்.

அந்த வகையில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம், அன்றைய தினம் விடுமுறை ஆகும். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணியாளர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஒவ்வொரு மாநிலம் அல்லது இடம் சார்ந்த பண்டிகைக்காக தொடர்புடைய பகுதிகளில் மட்டும்  வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது.

தற்போது மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் இதோ:

  • மே 1 – ஞாயிற்றுக்கிழமை – உழைப்பாளர் தினத்தை ஒட்டி நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை
  • மே 2 – திங்கள்கிழமை – ரம்ஜான் பண்டிகை – கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும் விடுமுறை.
  • மே 3 – செவ்வாய்க்கிழமை – ரம்ஜான் பண்டிகை – கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை
  • மே 8 – ஞாயிற்றுக்கிழமை – நாடெங்கிலும் வார இறுதி விடுமுறை
  • மே 9 – திங்கள்கிழமை – ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா – மேற்கு வங்கம் மட்டும்.
  • மே 14 – சனிக்கிழமை – இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை
  • மே 15 – ஞாயிற்றுக்கிழமை – வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
  • மே 16 – திங்கள்கிழமை – புத்த பூர்ணிமா – நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.
  • மே 22 – ஞாயிற்றுக்கிழமை – வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் விடுமுறை.
  • மே 28 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
  • மே 29 – ஞாயிற்றுக்கிழமை – நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

Categories

Tech |