Categories
மாநில செய்திகள்

மே மாதம் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்…. பிரதீபா கவூர் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.3 சதவீதமாக உள்ள நிலையில் மே மாதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர் பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார். 19,000 என்ற அளவில் எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றினால் தொற்று நோயின் போக்கை மாற்றலாம். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் கட்டாயம். கட்டாயம்  மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |