Categories
தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா…! பாஜகவின் குறியில் சிக்கி சிதையும் திரிணாமுல் காங்கிரஸ் …!!

மேற்கு வங்க மாநிலம் வனத்துறை அமைச்சர் ரஜிப் பேனர்ஜி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியான பாஜகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ரஜிப் பேனர்ஜி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர் வரை பலர் தன் மீது பொய் பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். ஒரே மாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |