நடிகர் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவானவலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் நடிகர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் நடிகர் அஜித் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.