Categories
மாநில செய்திகள்

மே-1 ஆம் தேதி முதல்…. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதையடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் செய்முறை தேர்வு மட்டும்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |