மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
இதைத்தொடர்ந்து பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரும் வரும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.