தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப்பு ஆகியவை மே 1ஆம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. தரவுகள் சேமிப்பில் விதிமுறைகளை மீறியதற்காக இந்த தடையை விதித்துள்ளது. இந்த உத்தரவால் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர்கள் தொடர்ந்து இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.