தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது குறித்த விசாரனை சென்னை உயர் நீதிமன்றல் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மையான மக்கள் அன்றையதினம் வெளியே வரவாய்ப்பில்லை.
இது மட்டுமன்றி மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடுவதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு தேவையில்லை” என வாதிட்டார். இருப்பினும் இது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும், வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் செய்தியாளர்களை அனுமதிப்பது குறித்தும் முடிவெடித்து அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.