Categories
மாநில செய்திகள்

மே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன்…. ஸ்டெர்லைட் உறுதி…. அமைச்சர் தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கில் சில விலக்குகள் தேவை என முதல்வரிடம் தொழில்துறையினர் கேட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மே 11ம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குவதாக ஸ்டெர்லைட் உறுதி தந்துள்ளது. 70 மெட்ரிக் டன்னாக ஆக்சிஜன் அளவை அதிகரித்து தர ஸ்டெர்லைட்டை வலியுறுத்தியுள்ளோம். தொழில் தேவைகளுக்கான ஆக்சிஜனை மருத்துவ தேவைக்காக மாற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |