Categories
தேசிய செய்திகள்

மே 12 முதல் முழு ஊரடங்கு அமல்….. அரசு திடீர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகின்ற மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |