பல்வேறு துறைகளில் 2022-23 ஆம் ஆண்டுக்கான முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர மே 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.unom.ac என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகம் 19ஆம் நூற்றாண்டின் இடையில் கட்டமைக்கப்பட்டது.
தற்போதுவரை மாணவர்களுக்கும் சமுதாயத்திற்குமான மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தென் மாநிலத்தில் அறிவை மேம்படுத்துவதிலும், அறிவு கருத்துகளை உருவாக்குவதிலும் வலுவான அடித்தளம் இட்ட நிறுவனங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகின்றது.