தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. அதனால் பல பயனர்கள் வாட்ஸ் அப்பில் இருந்து டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறினார். வாட்ஸ் அப்பில் தனியுரிமை கொள்கைகளுக்கு நாம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் மே 15ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ் அப் செயலி இயங்காது, புதிய தனியுரிமை ஏற்காதவர்கள் இன் கணக்குகள் நீக்கப்படும் என்று தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இது பற்றி வெளியான அதிகாரப்பூர்வ தகவலில், வாட்ஸ் அப்பின் தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்களது கணக்கு எதுவும் நீக்கப்பட மாட்டாது. ஆனால் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. அதாவது பயனர்கள் சாட்டிங் தவிர போன் மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆனால் பழைய ஏற்பாட்டின் தகவல்களை பார்க்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் உங்கள் போனில் இருந்து வாட்ஸ் அப் செயலியை நீக்கினாலும் உங்கள் கணக்கு நீக்கப்பட மாட்டாது.