வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வருகின்றன. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது.
உண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் என்ன தெரிவித்துள்ளது? மே 15க்கு பிறகு இந்த பாலிசி அமலுக்கு வருவது உண்மைதான். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கணக்குகள் நீக்கப்படாது. அதேநேரம் மே 15க்கு பிறகு ஏற்றுக்கொள்ளாதவர்கள் அடுத்த சில வாரங்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி புதிய செய்திகளை அனுப்பவும், பெறவும் முடியாது. ஆனால் அழைப்புகளை பெற முடியும் என்று தெரிகிறது. அது உங்கள் கணக்கு புழக்கத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்படும்.
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணக்குகள் 120 நாட்களுக்குள் நீக்கப்படும். 120 நாட்களுக்குள் அல்லது அதற்குப் பிறகோ ஏற்றுக்கொண்டு சேவையை தடையின்றி பயன்படுத்த முடியும். இதனால் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான். தங்களின் பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதுதான். அதனால் ஒன்று இந்தப் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் வேறு குறுஞ்செய்தி தளத்திற்கு மாற்றப்பட வேண்டும்.