திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தொடங்கிய நாள் முதலே அடிக்கடி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து இருந்தது. இந்நிலையில் தற்போது நடப்பு மாதத்தில் நூல் விலையானது நேற்று வெளியிடப்பட்டது.
இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூபாய் 40 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403க்கும், 24-ம் நம்பர் ரூ.415க்கும், 30-ம் நம்பர் ரூ.425க்கும், 34-ம் நம்பர் ரூ.445க்கும், 40-ம் நம்பர் ரூ.465க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395க்கும், 24-ம் நம்பர் 405க்கும், 30-ம் நம்பர் ரூ.415க்கும், 34-ம் நம்பர் 435க்கும், 40-ம் நம்பர் ரூ.455க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்வு காரணமாக அதிர்ச்சி அடைந்த பின்னலாடை தொழில் சங்கத்தினர் 6 நாட்களுக்கு பந்து அறிவித்துள்ளனர். இந்த செய்தி நிறுவன ஊழியர்கள் இடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது, அதன்படி திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.