Categories
தேசிய செய்திகள்

மே-17 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கடுமையான கட்டுப்பாடுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களும் ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மே-17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மே-17 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது. இம்முறை ஊரடங்கு மிகக்கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |