தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை விதி முறைகளை பின்பற்றி நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை திமுக வழக்கறிஞர்கள் நீலகண்டன், பச்சையப்பன் ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலகண்டன், வாக்கு எண்ணிக்கையின் போது மையத்தில் உள்ள பதினான்கு மேசைகளுக்கு தனித்தனி சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இவிஎம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், வாக்கு எண்ணிக்கை அன்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாறும் கோரினார். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியே தபால் வாக்குகளை என்ன வேண்டும் என சத்திய பிரதா சாகுவிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.