Categories
மாநில செய்திகள்

மே 20ஆம் தேதி முதல்….. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மே 20ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.  https://t.me/+huB_ieZ54OEzODc9.

Categories

Tech |