Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 20 வரை….. கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக்கல்வித்துறை ஆணை….!!!!

மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இன்றுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்லையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்துவது, அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்றுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 20ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர்கள் எப்போது பள்ளிக்கு வர வேண்டும்? ஆசிரியர்களுக்கு எத்தனை நாள் விடுப்பு? போன்றவை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |