தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 23-ஆம் தேதி நள்ளிரவு பரண்டு மணி முதல் மதியம் 2 மணி வரை நெப்ட் (NEFT) சேவை நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக நிஃப்ட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் வங்கி சேவையில் பெரிய அளவிலான ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்ய நெப்ட் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.