தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கும் மட்டுமே காலை 10 மணி வரையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழக அரசு பல கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்நிலையில் திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், மே 24 முதல் 29-ஆம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது என வெங்காய மண்டி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.