வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் ஒடிசா இடையே மே 26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.