புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மளிகை கடை, பாலகம், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு செயலர் அஷோக் குமார் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மீதமுள்ள கடைகளை வரும் மே 3 ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளையும் மே 3 ஆம் தேதி வரை மூட வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.