வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து உள்ள காரணத்தினால், மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிட்டு இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை வேகம் அடுத்து வரும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒரு மாத காலத்திற்குள் வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.