Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய தகவல்…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அதிகரிக்கும் இடங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்த நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இதே மாதிரி தமிழகத்தில் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |