Categories
தேசிய செய்திகள்

மே 3,4 தேதிகளில் நடக்கும் பிளஸ் டூ தேர்வு… வேறு தேதிக்கு மாற்ற கோரிக்கை…!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் மே 3ஆம் தேதி நான்காம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று தமிழக தலைமை ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர குழு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அனந்தராமன் இதற்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடத்துவதாக தெரிவித்துள்ளது .சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இது ஒரு சில இடத்தில் மூணாம் தேதி வரை நடைபெறும்.இதனால் 3ஆம் தேதி அசாதாரண நிலை ஏற்படும்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சீரான மனநிலையில் தேர்வை எழுத முடியாது. எனவே அன்றைய தினம் போக்குவரத்து இடர்பாடுகளையும் மாணவர்கள் சந்திக்க நேரிடும். இதன் காரணமாக கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்றும், மே 3-ம் தேதி நடைபெறும் பிளஸ்டூ பொதுத் தேர்வை கடைசியாக நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |