Categories
மாநில செய்திகள்

மே 6இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு…. பரபரப்பு போஸ்டர்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், “மே 6ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் தளபதி மு.க.ஸ்டாலினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” என்று குறிப்பிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

Categories

Tech |