Categories
உலக செய்திகள்

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு…. விற்பனைக்கு…. எவ்வளவு தெரியுமா…?

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு 10 வருடங்கள் கழித்து தற்போது விற்பனையாகியுள்ளது. 

மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான பண்ணை வீடு “நெவர்லாந்து ராஞ்ச்”. இந்த வீடானது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீடானது அவர் இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2,700 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை பில்லியனர் ரான்  பார்க்கில் என்பவர் வாங்கியுள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. பதிவேட்டின் படி பல வருடங்களுக்கு முன்பு Sycamore valley ranch என பெயர் மாற்றப்பட்டு 22 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையானது முதலில் 100 மில்லியன் டாலர் என 2016இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

பின்பு ஒரு ஆண்டுகள் கழித்து 67 மில்லியன் டாலர் என மாற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் 12 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட குடியிருப்பு, 3500 சதுர அடி உள்ள நீச்சல் வீடு, 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நடன ஸ்டூடியோ கொண்ட கட்டிடம், டிஸ்னி ஸ்டைல் ரயில் நிலையம், fire house, மற்றும் களஞ்சியம் போன்றவை உள்ளது. எனினும் மைக்கேல் ஜாக்சன் 1958 ஆம் வருடத்தில் இந்த வீட்டை 19.5 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். ஆனால் பொருளாதார நெருக்கடியால் colony capital NLC  நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். மேலும் அந்த பண்ணை வீட்டுக்கு மீண்டும் வந்த அவர் கடந்த 2005 ஆம் வருடத்தில் அங்கே ஒரு சிறுவனை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த சொத்துக்களை கைவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |