Categories
மாநில செய்திகள்

“மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள்”…. தமிழக அரசிடம் சீமான் முக்கிய கோரிக்கை….!!!!!

கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் கிடைக்கவும் வழிவகைச் செய்யவேண்டும். அதுமட்டுமின்றி உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழ் கல்வெட்டுகளை திராவிடக் கல்வெட்டுகள் என கூறாமல், இனி தமிழ் கல்வெட்டுகள் என்றே ஆவணப்படுத்த வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Categories

Tech |