பண்டிகை காலத்தில் கட்டுப்படுத்தும் பொருட்கள் மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி மைசூரு- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06201) மதியம் 12:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது. பின்னர் 4:35 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மற்றொரு மார்க்கத்தில் வருகிற 8-ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 12:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4:15 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது.
பின்னர் 4:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11:45 மணிக்கு மைசூரு செல்கிறது. இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, இரண்டு குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள் இணைக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.