Categories
தேசிய செய்திகள்

மைசூர் சில்க், மைசூர் சோப் வரிசையில்… தற்போது வரவிருக்கும் சில்லறை நகை விற்பனை… கர்நாடக அரசு அசத்தல்..!!

இந்தியாவில் தங்க சுரங்கத்தை கொண்டு தங்க உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்து வரும் ஒரே மாநிலம் கர்நாடகா மாநிலம். இந்த மாநிலம் பிராண்ட் கர்நாடகா என்ற முத்திரையுடன் தங்க நகைகளை சில்லரை விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

பிரான்சில் கர்நாடகா சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. தனியார் நகைகளுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அதே சமயம் அரசு சின்னத்துடன் தங்க நகைகளை விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான மைசூர் சில்க்ஸ், மைசூர் சந்தன சோப் ஆகியவற்றின் வரிசையில் இந்த சில்லறை நகை விற்பனை நிலையங் களையும் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார மேம்பாட்டு, வேலை வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

Categories

Tech |