Categories
தேசிய செய்திகள்

மைதானத்தை டிரம்ப் திறக்கலை…. திடீர் மாற்றம் ஏன் ? வெளியுறவுத்துறை விளக்கம் …!!

அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை  கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நிகழ்விற்கு சச்சின் டெண்டுல்கர் , கபில்தேவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆன மோதேரா மைதானத்தை நிச்சயமாக ஒரு இந்தியர் தான் திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |