நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மைதானத்தின் மேற்பரப்பு நயாகரா வீழ்ச்சி போல் இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது: “போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் போதிய அளவில் கொடுக்கப்படவில்லை. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்தபடி பந்தை திருப்ப முடியவில்லை. மைதானத்தில் ஈரத்தன்மை நயாகரா நீர்வீழ்ச்சி போல் இருந்தது. மேலும் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா மற்றும் மொயின் அலி மொத்தமாக மூன்று ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். ஆனால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றும் என்று நாங்கள் நினைத்தோம். கடைசியில் லக்னோ அணியினர் சிவன் துபே வீசிய 19-வது ஓவரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அந்த அணி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது” என அவர் கூறினார்.