தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் பேட்டி அளித்த சிங்கமுத்து. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் ஓடாதுன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொன்னேன். நா படத்த பார்க்கல. ஆனா அந்த படத்த பாத்துட்டு வந்தவங்க மொகத்த என்னால பாக்க முடியல. காமெடிங்கிறது ஒருத்தர் மட்டும் பண்றதில்லை. வடிவேலுவுக்கு நட்பை களங்கப்படுத்ததான் தெரியும் என கடுமையாக விமர்சித்தார்.