Categories
உலக செய்திகள்

மொசாம்பிக் நாட்டில் பதவி நீக்கப்பட்ட 6 மந்திரிகள்…. அதிபரின் அதிரடி அறிவிப்பு ….!!!

மொசாம்பிக் நாட்டு அதிபர் 6 மந்திரிகளை பதவியை விட்டு நீக்கியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொசாம்பிக் நாடானது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டில் 6 மந்திரிகளை அதிரடியாக பதவியை விட்டு அதிபர் பிலிப் நியூசி நீக்கியுள்ளார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட மந்திரிகளில்அட்ரியானோ அபோன்சோ மலேயன் (நிதி), எர்னஸ்டோ மேக்ஸ் எலியாஸ் டோனேலா (கனிம வளங்கள்) ஆகியோர் அடங்குவர். ஆனால் பதவி நீக்கம் செய்த அந்த 6 மந்திரிகளும் எதற்காக நீக்கப்பட்டார்கள், என்பது பற்றி அதிபர்  பிலிப் நியூசி எதுவும் பேசவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 6 மந்திரிகளை அதிபர் பதவி நீக்கம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் புதிய மந்திரிகளை நியமனம் செய்வது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து அந்த நாட்டின் அரசியல் நோக்கர்கள் இந்த பதவிநீக்கம், தங்களுக்கு  அதிர்ச்சி அளிக்கவில்லை என்று கூறிவருகின்றனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் மூத்த மந்திரிகள் உட்பட 6 பேரை அதிபர் பதவி நீக்கம் செய்திருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |