தமிழகத்தில் கோவில்களை வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் திறக்கக்கோரி பாஜகவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி முன்னாள் எம்பி ராமலிங்கம் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி, இந்து மத கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது.
இதனை கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. சனி, ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை மூடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை அரசு கூறுகிறது. ஆனால் டாஸ்மாக், பள்ளிக்கூடங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூ.5000 கொடுக்கும் ஒரே அரசு தமிழக அரசுதான் என்று கூறியுள்ளார்.