பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி தங்கையான சஞ்சனா கல்ராணி சில மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமினில் வெளியே வந்ததார். இந்நிலையில் சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் கேப்ஷனில் தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியிருக்கிறார். அதில் நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியிருக்கிறார். மேலும் நான் பார்ப்பவரின் கண்களுக்கு அழகாக இருக்கிறேன். அதனால் தான் என் தலை முடியை முழுவதுமாக தியாகம் செய்து இருக்கிறேன். நான் கடவுளிடம் வற்புறுத்திய மனதை முழுவதையும் நிரப்பி உள்ளேன்.
பல சிரமங்களைக் கடந்து வாழ்க்கை மீண்டும் அழகாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் இந்த கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டேன் பதிவிட்டிருக்கிறார். சஞ்சனா கல்ராணியின் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஏன் இந்த முடிவு என்றும் ஏன் என்னாச்சு எனவும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.