மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.
சென்னையில் உள்ள பாடி பகுதியில் பாலச்சந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அண்ணா நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் நடந்த மது விருந்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையும் அதில் சுட்டி காட்டி இருந்தார்.
அதன் பிறகு மொட்டை மாடிகளில் நடத்தப்படும் பார்களில் மதுபானம் தவிர சில போதைப் பொருட்களும் பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதாரம் இல்லாமல் குற்றங்கள் சாட்டப்பட்டிருப்பதாக கூறி மனு கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்கள். இதன் காரணமாக பாலசந்தர் தன்னுடைய மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். இதனால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.