புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர். இதனால் புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது.
இவ்வாறு சிகரெட் பெட்டிகள் மீது எச்சரிக்கை வாசகம் உள்ள நிலையில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகத்தை பதிவு செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளது. சிகரெட் பெட்டியில் உள்ள எச்சரிக்கை வாசகத்தை விட சிகரெட் மீது எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என நம்புவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.