அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பாரிஸ் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்காவை இணைப்பதாக ஜோர்டன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்றால் மூன்று வருடங்கள் அதற்காக காத்திருக்க வேண்டியது அவசியம். எனவே 2017 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான முடிவை ட்ரம்ப் வெளியிட்டார். நேற்றுடன் அந்த காலம் முடிவடைந்ததால் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக அமெரிக்கா வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஜோ பைடேன் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இன்னும் 77 நாட்களில் நிர்வாகம் ஒப்பந்தத்தில் இணையும் என பதிவிட்டிருந்தார். அதேநேரம் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் செலவில் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.