ஜெர்மனியில் போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தப்பட்டன பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் Dusseldorf நகரில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகள் திடீரென்று மொத்தமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் தீவிபத்தால் பல மில்லியன் யூரோ அளவு இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தீ விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.