Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 300 கிலோ…. போலீசாரின் அதிரடி சோதனை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக லாரியில் 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை லாரியுடன் சேர்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லோகேஷ், ஹரிஷ் மற்றும் அய்யப்பரெட்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |