Categories
தேசிய செய்திகள்

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் நபர்களுக்கு…. லிட்டருக்கு ரூ.25 உயர்வு…..!!!!

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலையானது லிட்டருக்கு ரூபாய் 25 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் சில்லறை விற்பனைக்கான விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது 136 நாட்களாக மாற்றம் இன்றி நீடிக்கிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் எரிப்பொருள் விலை மாற்றப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.

தேர்தல் முடிந்த பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்தனர். இருந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டபோதிலும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்யும் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அதன் விலை லிட்டருக்கு ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூபாய் 94.14 ஆக இருந்த 1 லிட்டர் டீசல் விலை, மொத்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூபாய் 122.05-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையில் தில்லியில் டீசல் விலையானது ரூபாய் 86.67-இல் இருந்து ரூ.115-ஆக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக மாநில போக்குவரத்துக் கழகங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை பாதிக்கப்படவுள்ளது. ஆகவே மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் நபர்களுக்கு மட்டுமே தற்போது விலையானது உயர்த்தப்பட்டு உள்ளது.  இதனால் அவர்கள் எரிப்பொருள் நிறுவனங்களிடம் இருந்து நேரடி முறையில் டீசலை வாங்காமல், அதன் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று எரிப்பொருளை வாங்கக்கூடும். அதனால் அந்த நிறுவனங்களின் இழப்பு மேலும் உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |