குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்காக சொட்டு மருந்து முகாம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக 1,647 இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மருந்தகங்கள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது.
மேலும் மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் சொட்டு மருந்து செலுத்த வேண்டும். இந்த சொட்டு மருந்து முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக கமிஷனர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.