ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனரிடம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டி போலீஸ் உதவி கமிஷனராக வேலை பார்த்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஜோதி என்பவர் சங்கரலிங்கத்திடம் இருந்து 20 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் கூறிய படி ஜோதி வீட்டுமனை வாங்கி கொடுக்கவில்லை.
மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் சங்கரலிங்கம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ஜோதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .