Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 1/2 லட்ச ரூபாய்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் பிரதாப் மற்றும் ராஜு ஆகியோர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடைகளில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை கடைக்கு சென்ற ராஜு மற்றும் பிரதாப் ஆகியோர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது  20 1/2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிரதாப் மற்றும் ராஜூ ஆகியோர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |