Categories
அரசியல் மாநில செய்திகள்

மொத்தம் 21…. பாஜக கேட்கப் போவது 10….. தாக்குப் பிடிக்குமா அதிமுக….? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 மேயர் பதவிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல காட்சிகளை தமிழ்நாடு பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலின் கடைசி கட்டம் நடந்துமுடிந்தது. அதன் முதல் கட்டம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு இதற்கு முன்பு 15 மாநகராட்சிகள் இருந்தன. ஆனால் தற்போது கூடுதலாக 6 நகராட்சிகள் இணைக்கப்பட்டு 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மாநகராட்சிகளுக்கு சேர்த்து தேர்தல் நடக்கும் என்று திமுக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல நகராட்சிகளின் எண்ணிக்கை 152. இந்த தேர்தலில் திமுக கூட்டணி தெளிவாக உள்ளது. அவர்கள் பதவி பிரிவினையில் பிரச்சினை இருக்கப் போவதில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் தான் யாருக்கு என்ன கிடைக்கும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை அதிகளவிலான பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறது. ஆனால் அதில் சரிபாதியை பாஜக கேட்கின்றது. இதில் பாமக, தேமுதிக கூட்டணி யிலேயே இல்லை. அதனை பாமகவும், தேமுதிகவும் அறிவித்துவிட்டது.

தற்போது பாஜக மட்டுமே கூட்டணியை தொடர உள்ள நிலையில் 21 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. கொங்கு மண்டலத்தில் மட்டும் குறைந்தது மூன்று சீட்டாவது வேண்டுமென்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதை போல நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் சீட்டுகள் வேண்டுமென்று பாஜக கேட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |