தேனியில் 4 சட்டமன்றத் தொகுதியில் சுமார் 74 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், தேனியில் அமைந்திருக்கும் 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 74 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிகளில் ஒன்றான ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.கவினுடைய வேட்பாளராக இலோஜன் என்பவரும், தி.மு.க வேட்பாளராக மகாராஜன் உட்பட மொத்தமாக 20 நபர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து பெரியகுளத்தில் அ.தி.மு.க வேட்பாளராக எம்.முருகன் என்பவரும், தி.மு.க வேட்பாளராக கே.எஸ் சரவணகுமார் என்பவர் உட்பட மொத்தமாக 15 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனை தொடர்ந்து போடியில் அ.தி.மு.க வேட்பாளர் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.கவினுடைய வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் உட்பட 24 நபர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் கம்பத்தில் அ.தி.மு.க வேட்பாளராக எஸ்.பி.எம் சையதுகானும், தி.மு.க வேட்பாளராக என்.ராமகிருஷ்ணன் உட்பட மொத்தமாக 15 நபர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 4 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை அடைபவர் யார் என்பதற்கும், பெருவாரியான பொதுமக்கள் எந்த நபரை தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்விக்கும் முடிவு ஞாயிற்றுக்கிழமையான இன்று தெரிந்துவிடும். மேலும் தேர்தலினுடைய முடிவை தெரிந்துகொள்ள அரசியல் கட்சியினர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் உள்ளனர்.