சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் 69 சதவீதம் பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 69 சதவீத வாக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. 4 தொகுதிகளில் அதிக பட்சமாக 72.01 சதவீதம் திருப்பத்தூரில் பதிவாகியிருந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம் பின்வருமாறு;-
காரைக்குடி தொகுதி;-
மொத்த வாக்குகள் – 3,17,041
பதிவானவை – 2,09,916
பெண்கள் – 1,11,511
ஆண்கள் – 98,400
மற்றவர்கள் – 5
சதவீதம் – 62.22
திருப்பத்தூர் தொகுதி;-
மொத்த வாக்கு – 2,91,677
பதிவானவை – 2,10,037
பெண்கள் – 1,13,690
ஆண்கள் – 96,347
சதவீதம் – 72.01
சிவகங்கை தொகுதி;-
மொத்த வாக்கு – 300634
பதிவானவை – 197404
பெண்கள் – 106438
ஆண்கள் – 90966
சதவீதம் – 65.60
மானாமதுரை ( தனி ) தொகுதி;-
மொத்த வாக்கு – 277763
பதிவானவை – 199637
பெண்கள் – 143021
ஆண்கள் – 95313
மற்றவர்கள் – 3
சதவீதம் – 71.87