Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 401 மனு…. கல் குவாரிக்கு தடைவிதிங்க…. கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…!!

திருமயம் அருகில் கல்குவாரி தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்துள்ளனர்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் திருமயம் அருகில் காட்டுபாவா பள்ளிவாசல் பக்கம் மெய்யபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு  தடை விதிக்க வேண்டும் என்று அந்த கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்தனர்.

இதில் பெண்கள் அதிகமாக வந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களை அனுமதிக்காமல் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர். குறிப்பிட்ட நபர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் குறிப்பிட்ட நபர் மட்டும் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந்த கல் குவாரியில் உள்ள கற்களை வெடி வைத்து தகர்க்கபடுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள வழிபாட்டுத்தலங்கள், கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் வெடி வெடிப்பதால் பயங்கர சத்தம், அதிர்வு ஏற்படுகிறது. எனவே அந்த கல் குவாரியை தொடர்ந்து செயல்பட விடாமல் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்கள்.

இதேபோன்று புதுக்கோட்டை டி.வி.எஸ் கார்னில் உள்ள மதுபான கடைகளை நகரின் வெளிப்பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சார்பாக நகர்  மன்ற வார்டு உறுப்பினர் மனு கொடுத்துள்ளார். மேலும் தங்களது கோரிக்கை தொடர்பாக பொது மக்கள் பலர் மனு கொடுத்துள்ளார்கள். மொத்தமாக நேற்று 401
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 70,000 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களை கலெக்டர் கவிதா ராமு கொடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

Categories

Tech |