Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 தொகுதி…. 66.54 சதவீத வாக்குப்பதிவு…. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு….!!

நெல்லையில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு 5 தொகுதியில் மொத்தமாக 66.54 சதவீத வாக்குப்பதிவு பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டங்களிலிருக்கும் பொதுமக்கள், அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் தனது ஜனநாயக கடமையை செலுத்தினர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இவ்வைந்து தொகுதியிலுமே காலை 7 மணிக்கு முதலாக வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினர். அதன்பின் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் சிறிது சிறிதாக சென்று தனது வாக்கினை செலுத்திவிட்டு வந்தனர். இதனையடுத்து இறுதியாக இவ்வைந்து தொகுதிகளையும் சேர்த்து திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீத வாக்கினை பதிவு செய்துள்ளார்கள்.

Categories

Tech |